எமது மக்களுக்கு இன்னும் 2 வருடங்கள் காத்திருக்க முடியாது- ஆர். சம்பந்தன்

1064 0

இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் இரண்டு வருடங்களை வழங்க எமது அரசாங்கம் தயாரில்லையென பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்புப் பணிகள் மந்தகதியில் சென்று கொண்டிருப்பதாகவும் நாம் ஐ.நா. அரசியல் துறைச் செயலாளரிடம் எடுத்துக் கூறினோம்.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர்  ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவர் இன்று(21) எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுடன் கலந்துரையாடலை நடாத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் ஆர்.சம்பந்தன் இதனைக்  குறிப்பிட்டார்.

Leave a comment