முடிந்தால் பெடரல் அரசியலமைப்பை நிறைவேற்றட்டும்

273 0

தான் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 05 பேர் விலகியதில் இருந்து அரசியலமைப்பு பேரவை செல்லுபடியற்றதாகிவிடும் என்றும், ஆகையால் தற்போது முடிந்தால் பெடரல் அரசியலமைப்பை கொண்டு வந்து அதனை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். 

நேற்று பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திரய முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் இயல்பாகவே அரசியலமைப்பு பேரவை உறுப்பினராகியதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆரம்பத்தில் இருந்தே செயற்பாட்டுக் குழு அல்லது உப குழு கூட்டங்கள் 06 இல் பங்கேற்பதில் இருந்து தமது கட்சி தவிர்ந்திருந்ததாக அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு வௌியில் அரசியலமைப்பு பேரவை என்ற பெயரில் குழுவொன்றை கூட்டி புதிய அரசியலமைப்பு வரைவை வகுத்து அந்த நிகழ்ச்சி நிரலை கொண்டு வருவதே ரணில் விக்ரமசிங்கவின் தேவையாக இருந்தது என்றும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டால் அது சாத்தியமாகவில்லை என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

Leave a comment