சீனா: மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் வெடி விபத்து – 2 பேர் பலி

475 0

சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் படுகாயம் அடைந்தனர்.

சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலை உள்ளது. இங்குள்ள கடைகள் ஒன்றில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலு, 55 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்துள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment