சுவிசில் நினைவு கூரப்பட்ட ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்களின் வணக்க நிகழ்வு!

443 0

தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும், பன்முகக் கலைஞருமான ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையிலும், சூரிச் மாநிலத்தில் இளம்றோயல் விளையாட்டுக்கழகத்தினால் தமிழீழ விடுதலையின் மூத்தபோராளிகள் நினைவுசுமந்து நடாத்தப்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் ஐயா வீரமுத்து சந்தானம் அவர்களுக்குர்pய ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், மலர்வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் ஐயா அவர்களினது நினைவுகள் சுமந்து கவிதைகள், நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து இலக்கு வெல்லும் வரை மாவீரர்களின் கனவோடு தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் எமது பயணம் தொடரும் என்ற உறுதியோடு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

Leave a comment