கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா மாற்றத்துக்கு கிரண்பேடி எதிர்ப்பு

209 0

டி.ஐ.ஜி. ரூபாவை மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறுகளை வெளிக்கொண்டு வருவதை தடுப்பது போல நமது சிஸ்டங்கள் இருப்பதை இது காட்டுகிறது என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.

கர்நாடக ஜெயிலில் விதிமுறைகளுக்கு மாறாக சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளதை டி.ஐ.ஜி. ரூபா அம்பலப்படுத்தினார்.

இதற்காக புதுவை கவர்னரும், திகார் ஜெயில் முன்னாள் தலைமை அதிகாரியுமான கிரண்பேடி டி.ஐ.ஜி. ரூபாவுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பணிகளை தைரியமாக தொடர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

அதற்கு ரூபா நன்றி தெரிவித்ததுடன் கிரண்பேடி ஆதரவால் எனக்கு 100 யானைகளின் பலம் கிடைத்துள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ரூபா சிறைத்துறை டி.ஐ.ஜி. பதவியில் இருந்து மாற்றப்பட்டார். இதற்கு கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டி.ஐ.ஜி. ரூபாவை மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறுகளை வெளிக்கொண்டு வருவதை தடுப்பது போல நமது சிஸ்டங்கள் இருப்பதை இது காட்டுகிறது.

ரூபாவை மாற்றியதற்கு பதிலாக இந்த பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காண வேண்டும் என்பதை இப்போது கவனித்திருக்க வேண்டும். அதற்கான நேரம்தான் இது. ஆனால் வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். ரூபா எந்த பதவிக்கு சென்றாலும் இதேபோல தைரியத்தோடும், நம்பிக்கையோடும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment