மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு

283 0

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களின் அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி சட்டமூலமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளுக்கான வேட்புமனுப் பத்திரங்களில், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் வகையிலேயே இந்தச் சட்டம் திருத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், நியமனப்பத்திரம் ஒன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்பட வேண்டும்.

நியமனப்பத்திரம் ஒன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய மொத்த எண்ணிக்கையினரான வேட்பாளர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவான பெண் வேட்பாளர்களை உள்ளடக்குதல் வேண்டும்.

பெண் வேட்பாளர்களைக் கொண்டிராத நியமனப்பத்திரத்தை நிராகரித்தல் ஆகிய திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மாகாணசபைகள் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டு, அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையால், செப்டெம்பர் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடையவுள்ள வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment