சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு

11777 0

முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு!

நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் தமிழ்த்தேசியமாணவர் பேரவை தமது ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது

இது தொடர்பில் இவர்கள் மேலும் தெரிவிக்கையில்

கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும். இந்தக் காட்டில் 177 ஏக்கரை அழித்து முஸ்லிம் மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும்இத்திட்டத்தை கட்டாயமாக எதிர்க்கவேண்டியது கட்டாயமானதொன்றாகும். போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப் பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை இவ்விடத்தில் நினைவிற்கொள்ளத்தக்கது.

எனவே நாம் எல்லோரும் அரசியல் கட்சிபேதங்களுக்கு அப்பாற்பட்டு, எமது இனப்பரம்பலை சிதைக்கும் விதத்தில் அமைந்துள்ள இவ்விடயத்திற்கு எதிராக ஒன்றினைந்து எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக   சட்விரோத குடியேற்றத்தை எதிர்க்கும் இளைஞர் அணியால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஞாயிறு காலை 11.00  மணிக்கு ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

அந்தவகையில் இப்போராட்டத்திற்கு தமிழ்த்தேசியமாணவர்பேரவையினர் முழு ஆதரவை வழங்குவோம் என்பதை அறியத்தருகின்றேன் என வடமாகாண தமிழ்த்தேசியமாணவர்பேரவை தலைவர் மணிவண்னண் தனுசன் தெரிவித்துள்ளார்

Leave a comment