பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – ஐ.நா.சபை

7936 0
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள்  உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் கொழும்பில் நேற்று  நடத்திய ஊடக சந்திப்பில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்துக்குரியவர்களிடமிருந்து உண்மை நிலையை அறிய சித்திரவதை செய்யும் முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள், எந்தவித சட்டத்திற்கும் அமையாத வகையில், தடுத்து வைக்கப்பட்டு, பாராதூரமான வகையில், சர்வதேச சட்டத்துக்கு எதிராக செயற்படும் தன்மையைக் கொண்டுள்ளது.
அத்துடன், மனிதாபிமான மற்ற முறையில் செயற்பட்டு, அதனை சட்டத்திற்கு அமைவான வகையில் மாற்றும் தன்மையை இந்தச் சட்டம் கொடுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில், சட்டமா அதிபர் தொடர்ந்தும் தலைமை வழக்குத் தொடுநராக திகழ்கிறார்.
இதன்மூலம், சந்தேகத்துக்குரியவருக்கு பிணை வழங்கும் செயற்பாடு, அவர் கையிலேயே முற்று முழுதாக தங்கியுள்ளது.
இது, வீட்டோ அதிகாரம் மூலம் எப்படியான சட்டத்தையும் மாற்றும் தன்மையை உள்ளடக்கியுள்ளது.
தற்பொழுது இந்தச் சட்டத்தில் சில நீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உரிய நீதியை வழங்குவதற்கு ஏற்றவகையில் செயற்படவில்லை என்பது அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இந்தக் காரணங்களினால், ஜனநாயக நீதியினை பெறுவதற்கான அடிப்படைத் தன்மை மற்றும் சட்டத்திலுள்ள குறைபாடுகள் என்பனவற்றை முழுமையாக தன்னகத்தே இலங்கையின் சட்டத்துறை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் தொடர்பாக அவர், தகவல் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, விசாரணைகளை எதிர்நோக்கும் கைதிகளாக 81 பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 70 பேர் கடந்த 5 வருடங்களாக எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீதிவிசாரணைகளற்ற வகையில், 10 வருடங்களுக்கு மேலாக 12 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இப்படியான தன்மைகள் இலங்கை குறித்து சர்வதேசம் கொண்டுள்ள மதிப்புக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயல் என மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment