இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழக கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்கள் தமது நாட்டுக் கடற்பரப்பில், தாம் விரும்பியவாறு கடற்றொழிலில் ஈடுபடலாம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

