ஹட்டன் மற்றும் கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே தொடருந்து தடம்புரண்ட சம்பவம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தொடரூந்து திணைக்கள தொழில்நுட்ப நிபுணத்துவக் அதிகாரிகள் ஊடாக இந்த விசாரணைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தடம்புரண்ட தொடரூந்தின் போக்குவரத்து தன்மை மற்றும் தொழில்நுட்ப பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

