அரசியல் நடவடிக்கைகளுக்கு அபயராம விகாரையை பயன்படுத்த தடை

257 0

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடையுத்தரவை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

பத்பேரியே விமலஞான தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதனால் அதற்கு தடை விதிக்குமாறு கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி விடயங்களை ஆராய்ந்த நீதிபதி அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறி விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி இடம்பெற உள்ளது.

Leave a comment