அமெரிக்கா வரும் அபுதாபி விமானங்களில் லேப்டாப் தடை நீக்கம்!

286 0

அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் விமானங்களில் லேப்டாப் எடுத்து வர விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் விமானங்களில் லேப்டாப் எடுத்து வருவதற்கு விதிக்ப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்களின் எத்தியாட் ஏர்வேஸ் பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்தியுள்ளதால் லேப்டாப் எடுத்து வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தடை நீக்கப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்துள்ள எத்தியாட் ஏர்வேஸ் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் பிரத்தியேக சோதனை முணைத்தை அமைத்துள்ளது. அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை இயக்கும் ஒரே நிறுவனமாக எத்தியாட் ஏர்வேஸ் இருக்கிறது.

எட்டு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் விமானங்களில் லேப்டாப் எடுத்துவருவதற்கான தடையை அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் விதித்திருந்தது. அதன்படி எகிப்து, மொராக்கோ, ஜார்டன், ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து லேப்டாப் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது.

எத்தியாட் ஏர்வேஸ் வாரம் முழுக்க 45 விமானங்களை அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்கு இயக்கி வருகிறது. எதியாட் நிறுவனத்தின் போட்டியாளரான துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் அமெரிக்காவிற்கு இயக்கி வந்த ஐந்து விமான சேவைகளை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தது.

Leave a comment