இந்தியா – நெதர்லாந்து இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

3611 0

பிரதமர் மோடியின் பயணத்தின்போது இந்தியா – நெதர்லாந்து இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.

பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.

இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தனர்.

மார்க் ரட்டேயை சந்தித்த பிறகு பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியாவின் இயற்கையான கூட்டாளியாக நெதர்லாந்து திகழ்கிறது. நமது நாடுகள் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. அது மிகவும் வலிமையாக இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு பிராந்திய நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. உங்களது ஆதரவு இல்லையென்றால், இந்த அமைப்பில் இந்தியாவால் இடம் பெற்று இருக்க முடியாது“ என்றார்.

Leave a comment