யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

10 0

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று(19) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்று திங்கட்கிழமை முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை பழம் வீதி, ஆறுகால்மடத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை ஆறுகால்மட சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி வரை 04 மணி வரை செழியன் வீதியிலும், 20 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை புதிய குடியிருப்பு சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை அராலி வீதி மானிப்பாய் ஓட்டுமதத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை ஆர்.சி.பாடசாலையடி நாவலர் வீதியிலும்,

நாளை(20) முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை புதிய குடியிருப்பு சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி

வரை அராலி வீதி மானிப்பாய் ஓட்டு மடத்திலும், பிற்பகல் -02.30 மணி முதல் 04 மணி வரை ஆர்.சி. பாடசாலையடி நாவலர் வீதியிலும்,

நாளை மறுதினம்(21) முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை ஆசாத் வீதியிலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெரு நாவலர் வீதியிலும், பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை சேமக்காலை வீதி கென்டி வீதியிலும்,

22 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை தபாற்கந்தோர் வீதி நாவாந்துறையிலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை சனசமூக நிலையம்- வசந்தபுரத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை நித்தியா ஒளி சனசமூக நிலையத்திலும்,

23 ஆம் திகதி முற்பகல்- 09 மணி முதல் 11 மணி வரியை சூரிய ஒளி சனசமூக நிலையத்திலும், முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை கோவில் ஒழுங்கை, நாவாந்துறையிலும்,

எதிர்வரும்-28 ஆம் திகதி முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை நாவாந்துறை காதி அபூபக்கர் வீதியிலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை கண்ணாபுரம் சனசமூக நிலையத்திலும், பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை கண்ணாபுரம் சோலைபுரம் முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்கு வீதியிலும்,

29 ஆம் திகதி முற்பகல்- 09 மணி முதல் 11 மணி வரை கற்குளம் நாவாந்துறை வெள்ளாத்தெரு வீதியிலும், முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை சிவன் பண்ணை சீனி வாசகம் வீதி சந்நிதியிலும், பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை கோணாந் தோட்டத்திலும், 30 ஆம் திகதி மேற்குறித்த அனைத்துப் பகுதிகளிலும் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

ஆகவே, குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்களது வளர்ப்பு நாய்களுக்குத் தவறாது தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Post

பிலவுக்குடியிருப்பில் ஆற்றுப்படுத்தல் நிகழ்வு(படங்கள்)

Posted by - February 19, 2017 0
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் சிறுவர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை…

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை! விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள்!

Posted by - December 8, 2017 0
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை, விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால்…..(காணொளி)

Posted by - March 13, 2017 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யுமாறு, சட்டம் தெரிந்தவர்கள் உட்பட சிலர் கடிதம் அனுப்பி வைத்திருப்பது,…

மாணவன் கொலை – சாட்சி பதிவுகள் ஆரம்பம்

Posted by - February 1, 2017 0
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி துடுப்பாட்ட விளையாட்டின் போது ஒருவர் அடித்து கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையின் மூன்றாவது சாட்சியாளரின் சாட்சிய பதிவானது இடை நிறுத்தப்பட்டு எனைய…

செம்­மணி எலும்­பின் ஆய்­வுக்கு பன்­னாட்டு நிபு­ணர்­கள் வேண்­டும்! – மாவை

Posted by - July 24, 2018 0
செம்­ம­ணி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மனித எலும்­புக்­கூட்டை அகழ்ந்­தெ­டுக்­கும் பணி­க­ளி­லும் எலும்­பு­க­ளைப் பகுப்­பாய்வு செய்­யும் பணி­க­ளி­லும் பன்­னாட்டு நிபு­ணர்­கள் குழுவை அனு­ம­திக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை. சோ.சேனா­தி­ராசா.

Leave a comment

Your email address will not be published.