புதிய சலுகையின் கீழ் 90 நாட்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.

249 0

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.டி.வி. 444 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள புதிய சலுகையின் கீழ் 90 நாட்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.

பி.எஸ்.என்.எல் புதிய சௌக்கா 444 திட்டத்தை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பி.எஸ்.என்.எல் ஏற்கனவே அறிவித்த எஸ்.டி.வி.333 திட்டத்தின் புதிய பதிப்பு ஆகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.வி. 444 திட்டத்தின் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இதற்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏற்ற விலையில், சலுகைகளை வழங்கி வருகிறோம். இந்திய டெலிகாம் சந்தையில் நிலவும் சூழலுக்கு ஏற்ப சிறந்த விலையில் எங்களது சேவைகளை வழங்குகிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகளை வழங்கியதை தொடர்ந்து இந்திய டெலிகாம் சந்தையில் சேவைகளின் விலை குறைய துவங்கியது. இதுவரை 10.8 கோடி பேர் ஏற்கனவே ஜியோ சேவைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களில் தண் தணா தண் சலுகையின் கீழ் தினமும் 1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா முறையே ரூ.309 மற்றும் ரூ.509 விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இத்துடன் ஜியோவின் ஸ்மார்ட்போன் பிரான்டான லைஃப் போன்களை வாங்குவோருக்கு 20 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்திய செய்தி அறிக்கையில் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே குறைந்த கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். போன்றே ஐடியா, ஏர்டெல் மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் டேட்டா சேவைகளின் விலையை குறைத்துள்ளன. ஐடியாவின் புதிய சலுகையின் கீழ் ரூ.396 திட்டத்தில் 70 ஜிபி 3ஜி டேட்டா வழங்குகிறது. இதேபோல் வோடபோன் ரம்ஜான் சலுகை ரூ.786 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

Leave a comment