லெசோத்தோ நாட்டில் பிரதமரின் மனைவி சுட்டுக்கொலை

219 0

ஆப்பிரிக்க நாடான லெசோத்தோ நாட்டு பிரதமரின் மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

ஆப்பிரிக்க நாடான லெசோத்தோ நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவி ஏற்றிருப்பவர், டாம் தபானே. இவரது மனைவி லிபோலெலோ தபானே (வயது 58).

இவர் நேற்று முன்தினம் தலைநகர் மாசேரு அருகே அமைந்துள்ள மசானா நகரில், தனது தோழியுடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் அவர்கள்மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.

இதில் லிபோலெலோ தபானே சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது தோழி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை.

டாம் தபானேயும், லிபோலெலோ தபானேயும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடி இருந்த நிலையில், இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Leave a comment