மாணிக்கக் கல் எனக் கூறி, போலி கல் நியூஸிலாந்து நாட்டவரிடம் நிதி மோசடி!

236 0

கொழும்பு – 7 பகுதியில், வௌிநாட்டவரிடம் மாணிக்கக் கல் எனக் கூறி, போலி கல் ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பிரஜை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சந்தேகநபரால் நியூஸிலாந்து பிரஜை ஒருவரிடம் நீல மாணிக்கம் எனக் கூறி போலி கற்கள் இரண்டு, 2400 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நியூஸிலாந்துப் பிரஜை ஹொங்கொங் நாட்டுக்குச் சென்று இது குறித்து ஆராய்ந்த போதே அது போலி எனத் தெரியவந்துள்ளது.

பின்னர், அவர் கடந்த 18ம் திகதி மீண்டும் இலங்கைக்கு வந்து சுற்றுலா பொலிஸ் பிரிவினரிடம் இது பற்றி முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, கைதுசெய்யப்பட்ட சந்கேதநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.