இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க சமூக வலுவூட்டல், பொதுநல மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சராக தெரிவாகியுள்ளார்.
மேலும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பிரதியமைச்சராக கருணாரத்ன பரணவிதாரண சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சராக எரான் விக்ரமரத்னவும், பொதுத் துறைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் பாலித்த ரங்கே பண்டார நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராகவும், வசந்த சேனாரத்ன வௌிவிவகார இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

