கம்பஹா – திவுலபிட்டியவில் “பிரஜா சக்தி” சமூக அபிவிருத்தி குழுக்களுக்கான பயிற்சித் திட்டம்

6 0

“பிரஜா சக்தி” கிராமிய வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தின் கீழ், சமூக அபிவிருத்தி சபைக் குழுக்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறையொன்று கடந்த 27ஆம் திகதி கம்பஹா –  திவுலபிட்டியவில் நடைபெற்றது.

வெலகான சமூர்த்தி வலயத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த குழு உறுப்பினர்களுக்காக இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திவுலபிட்டிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எம்.டி. குமாரி ஆகியோரின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீரிகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மப்பிரிய விஜேசிங்கவும் கலந்துகொண்டார்.

மேற்படி பயிற்சிப் பட்டறையில் வளவாளராகப் பங்கேற்ற மேல் மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி அருண குமார, “பிரஜா சக்தி” தேசிய இயக்கத்துடன் இணைந்து செயற்படும்போது அபிவிருத்தித் திட்டங்களைச் சரியாகத் தெரிவு செய்தல் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.