“மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என எங்கள் அவைத்தலைவர் சொல்லியுள்ளார். அதுதான் எங்கள் நிலைப்பாடு” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ இன்று மூன்று கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்காக அவரை சந்தித்தேன். காயிதே மில்லத் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தினேன். உடனே அக்கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக சொன்னார்கள்.

