மீள்குடியேற்றத்திற்கு வனவளத்திணைக்களம் தடையாக உள்ளது – எம்.பி. சத்தியலிங்கம்

19 0

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முசல்குத்தி, வீரமாணிக்கங்குளம் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த பல குடும்பங்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற வரும்போது அதற்கு வனவளத்திணைக்களம் தடையாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.