இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

24 0

நாட்டில் களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது