உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி!

8 0

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 ஆவது கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் உழவு இயந்திரத்தில் சிக்கிப் உயிரிழந்துள்ளார்.

கல்கமுவ, 39 கந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் சாரதி ஆசனத்திற்கு அருகில் உள்ள பகுதியில் ஏறுவதற்கு அச்சிறுவன் முயன்றுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக அவர் உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த சிறுவன் மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியதில் அவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில்,  உடனடியாகக் மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்