மாத்தறை – மிரிஸ்ஸ கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (26) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது கடற்கரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கொடவில பொலிஸ் உயிர் காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால், குறித்த பெண் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ரஸ்ய நாட்டை சேர்ந்த, 29 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

