தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரைத்தான் சூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர், சாதியை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளதால், அதை தாய் – தந்தை கோவில் தெரு என மாற்ற உத்தரவிடக் கோரி, அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.வெங்கடேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

