கொழும்பு-13-ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது சற்றுமுன்னர் ஜிந்துப்பிட்டி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை,தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும்நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

