“எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் – பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது” என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.

