சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பு வழங்கவேண்டும் எனக் கோரி வேலணையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) போராட்டம் நடத்தப்பட்டது.
தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் இப்போராடடம் வேலணை வங்களாவடியில் நடைபெற்றது.
வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம் வரை சென்றதைத் தொடர்ந்து, பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்திருந்தனர்.

