யானை தாக்கியதில் ரஷ்ய பெண் காயம்

13 0

கதிர்காமம் – புத்தல​ வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த  45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு   காயமடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.45 மணி அளவில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.