இணையவழி வணிகம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி பெண் ஒருவரை ஏமாற்றியதற்காக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 02 ஐச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும், குளியாப்பிட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும் ஆவர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களும் அந்த பெண்ணை ஏமாற்றி 6,105,600 ரூபாயை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் பெயரில் உள்ள ஒரு கணக்கில் 1,500,000 ரூபாய் மோசடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கணக்கு தெரியாத ஒருவருக்கு பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

