2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 – 26 வரை நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை (11) நள்ளிரவு 12 மணி முதல் சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனமோ அல்லது அரச கல்வி நிறுவனமோ இந்த தடையை மீறி சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள் அலலது கருத்தரங்குகளை நடத்தினால் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

