விவாகரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு தொடர்பாக தனக்கு உதவ ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

