உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
முல்லைத்தீவு, கொக்கிலாய் உள்ளிட்ட பல கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் பெப்ரவரி 5 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்மானமும் இல்லாமல் முடிவடைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தை இடையூறு இல்லாமல் தொடர அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

