வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களில் யாரெல்லாம் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்த விவரங்களும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் பெயர் அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளதால், பல நாடுகள்ன் அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் பெயர் இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவிவருகிறது. பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்றில், பிரபல பிரெஞ்சு ஊடகவியலாளரின் பெயரை பயன்படுத்தி, வேறொரு இணையதளத்தைப் போலவே போலியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் எப்ஸ்டீனுக்கும் மேக்ரானுக்கும் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியை பலரும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிவருகிறார்கள். இந்நிலையில், இந்த சதியின் பின்னால் ரஷ்யா இருப்பதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மேக்ரானின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் இப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டுவருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

