சிலாபத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

14 0

சிலாபம் – கொலனிவெல்ல பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) மதியம் சிலாபம் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நடத்திய சோதனையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 60 லீற்றர் சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்து சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.