சுவிஸ் நாட்டவர் ஒருவர், தான் வளர்க்கும் செல்ல நாயால் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார்.
கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த நபர்
சுவிஸ் நாட்டவர் ஒருவரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, பொருட்கள் டெலிவரி செய்யும் சாரதி ஒருவரை கடித்துக் குதறிவிட்டது.
நாய் கடித்ததைத் தொடர்ந்து 18 மாதங்கள் அவரால் வேலைக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. அத்துடன், டெலிவரி செய்வதே அவரது தொழில் என்னும் நிலையில், டெலிவரிக்கு போகும்போதெல்லாம் நாய்களைப் பார்க்கும்போது நிரந்தர பயமும் அவருக்கு உருவாகிவிட்டது.
அவர் தனக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த நாய் ஏற்கனவே பலரைக் கடித்துள்ளது என்பதையும், அந்த நாயின் உரிமையாளருக்கு அது தெரியும் என்பதையும் தெரிந்துகொண்டுள்ளனர்.
ஆக, தன் நாய் கடிக்கும் வழக்கம் கொண்டது என்று ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில், அவர் நினைத்திருந்தால் அந்த நாய் அந்த சாரதியைக் கடிப்பதை தடுத்திருக்கமுடியும் என்பதையும் தெரிந்துகொண்ட நீதிபதிகள், அவர் அந்த சாரதிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
அந்த நபர் பெரும் கோடீஸ்வரர் என்பதால், அவர் வழங்கும் இழப்பீடும் அதிகமாக இருக்கவேண்டும் என்னும் அடிப்படையில், அவருக்கு 330,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
330,000 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இலங்கை மதிப்பில் 13,13,10,283.00 ரூபாய் ஆகும்.

