சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன.பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும் கலந்துகொண்டு கைகளில் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தித் தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.நிறைவாகத் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது..


















