நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் (1700 GMT) துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 35 சடலங்கள் மீட்கப்பட்டது என்று கைமா பிராந்தியத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அகமது தெரிவித்தார்.

