சிங்களபெளத்த பேரினவாத அரசு தமது 78ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தமிழர்களின் 78 ஆண்டு அடிமை வாழ்வை வெளிப்படுத்து பெப்ரவரி 4ஐ கரிநாளாக வெளிப்படுத்தி தமிழர் தாயகத்தில் 04.02.2026 இன்று கரிநாள் போராட்டம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுகொண்டுள்ள நிலையில் அதன் ஒரு அங்கமாக
தென் தமிழீழத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்,நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா,உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள்,காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே,எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும்,நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு,சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு,எங்கே எங்கே உறவுகள் எங்கே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.








