கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது

5 0

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் திங்கட்கிழமை (02) ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 28 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெகனார் ரக வாகனத்தில் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி 2 இலட்சத்து 25 ஆயிரம் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.