நாட்டின் பாதுகாப்பிற்குத் தரமான மனித வளங்கள் அவசியம்

11 0

நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின்  தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும்  அதற்குத் கல்வித் துறை  முக்கியமானது.கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

அந்தப் பயணத்தில் என்ன தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை  சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2023/2024 கல்வியாண்டிற்காக அரசு பல்கலைக்கழகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு  நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) அலரி மாளிகையில் நடைபெற்ற ‘ சிசு நேன பிரணாம’ உதவித்தொகை வழங்கும் விழாவில் உரையாற்றும் போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்வி ஊழியர் கூட்டுறவு சேமிப்பு சங்க லிமிடெட்  ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி வெறும் உதவித்தொகைகளை வழங்குவது மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் அர்ப்பணிப்பைப் பாராட்ட ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

1930 ஆம் ஆண்டு 58 உறுப்பினர்களுடனும் ஒரு ரூபாய் உறுப்பினர் கட்டணத்துடனும் தொடங்கப்பட்ட இந்த சங்கம், இன்று சுமார் இருநூற்று பதினைந்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

உலகம் எவ்வாறு வேகமாக மாறி வருகிறது என்பதையும், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொண்டு மனித வளங்களை வளர்க்க வேண்டியதன் அவசியமாகும். பள்ளிக் கல்வியிலிருந்தே இன்றைய உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறை மாற்றப்பட வேண்டும் . பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள்

இந்த மாற்றத்தில் தலைவர்களாகவும் பங்காளிகளாகவும் இருக்க வேண்டும்.

ஆண்டுதோறும் தொடக்கக் கல்வியில் சேரும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மாணவர்களில் சுமார் 40000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதால், இந்த தனித்துவமான வாய்ப்பை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த  வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில்  உரையாற்றிய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தொழில்  பிரதி அமைச்சருமான மஹிந்த ஜெயசிங்க, ஊழல் இல்லாத செயல்பாட்டின் காரணமாக, முன்னர் ரூ.1200 மில்லியனாக இருந்த சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை ஒன்பது மாத குறுகிய காலத்தில் ரூ.1700 மில்லியனாக அதிகரிக்க முடிந்தது என்றார்.

நடப்பாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2292 குழந்தைகளுக்கு ரூ. 13.7 மில்லியனுக்கும் அதிகமான உதவித்தொகை வழங்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு 15 மாணவர்களுடன் ரூ. 3500 தொகையுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 41 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது தற்போது ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 75000 வரை உதவித்தொகை வழங்குகிறதுஇ இது கற்பித்தல் தலைமுறையின் கூட்டு வலிமையைக் காட்டுகிறது.