பெருமளவான போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது!

5 0

அநுராதபுரத்தில் கவரக்குளம் – குடாவெவ பகுதியில் பெருமளவான போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று வெள்ளிக்கிழமை (30) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, 150 கிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது  செய்யப்பட்ட சந்தேக நபர் குடாவெவ, கல்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.