தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில் தீ பரவல்!

2 0

பண்டாரகமை – களுத்துறை வீதியில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 01.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை நகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலினால் ஏற்பட்ட சேதம் காரணமாக குறித்த தொழிற்சாலைக்கு சுமார் 20 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.