மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடி, சூதாட்டம் ஆகியவை மிகப் பெரியளவில் நடைபெறுகிறது.
சீனா-மியான்மர் எல்லையில் செயல்படும் ஒரு கும்பல் 1 பில்லியன் டாலரை விட அதிக மதிப்பில் சூதாட்டம் மற்றும் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மேலும் சீனர்கள் 14 பேர் இந்த கும்பலால் கொலை செய்யப்பட்டுள்னர்.
இந்த கும்பலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் சீன அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களுக்கு கடந்தாண்டு செப்டம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இவர்கள் மேல் முறையீடு செய்தனர்.
இதை சீன நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

