இரத்மலானை பகுதிகளில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இருவர் கைது!

2 0

போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய மற்றும் இரத்மலானை பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, உரகஸ்மன்ஹந்திய – ஹீபன்கந்த பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (29) இரவு, உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால்; மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 102 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நவதகல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உரகஸ்மன்ஹந்திய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலானை பகுதியில்  ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (29) மாலை, மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்; மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 305 கிராம் 180 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ரத்மலானை பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.