“ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?” என எடப்பாடி பழனிசாமிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து இரு தலைமைகளும் பேசி முடிவு செய்வார்கள். நேரடியாக இரண்டு கட்சி தலைவர்கள் (ராகுல் காந்தி – கனிமொழி) சந்தித்து பேசுவது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது? உருப்படியான காரியங்களை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக கூட்டணிக்கு காங்கிரஸை அழைத்த எஸ்.ஏ.சந்திர சேகர் விவகாரம் குறித்து கூறும்போது, “விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவரது ஆசையை சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார்.
முன்னதாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை டெல்லிக்கு அடிமை என்று சொல்கிறார்கள். யார் அடிமை? திமுகதான் டெல்லிக்கு அடிமை. டெல்லி சென்று ராகுலை, சோனியாவை சந்திக்கிறார்கள்” என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

