அருட்தந்தை மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம்

10 0

அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது கம்பஹா நீதவான் முன்னிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  6 பொலிஸ் அதிகாரிகளில் மூவர் இன்று வியாழக்கிழமை (29) கம்பஹா நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்கு  உட்படுத்திய போதே  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன கடந்த 24 ஆம் திகதி கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் தாக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.