நுவரெலியா ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவரும், நுவரெலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மற்றும் சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆயுட்காலம் காப்பாளருமான வீ. ஆதிமூலம் அவர்களின் தலைமையில் நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் 1 கோடியே 15 இலட்சம் செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (28) புதன்கிழமை சம்பிரதாய பூர்வமாக நாட்டப்பட்டது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட முன்னாள் ரோட்டரிக் கழகத்தின் ஆளுநர் குமார் சுந்தராஜ் அவர்களின் பாரியாரும் மற்றும் முன்னாள் ரோட்டரி கழகத்தின் ஆளுநர் வைத்தியர் விஜயகுமாரன் ஆகியோர் உட்பட ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர் .
மேலும் இவ் வைபத்தில் நிர்வாக சபை செயலாளர் பி. லிங்கராஜா, பொருளாளர் எஸ். யாதவசிவம், உபதலைவர் எஸ். பாலகிருஷ்ணன், காப்பாளர்களான வீ.ஆதிமூலம், ஏ. சந்திரன், இரா.பாலகிருஷ்ணன்,
கர். சுப்பிரமணியன் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களும் நுவரெலியா ரோட்டரிக் கழக உறுப்பினர்கள் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.
இந்த கட்டிடத்திற்கான 1 கோடியே 15 இலட்சம் ரூபாவை இந்தியா டில்லி தெற்கு ரோட்டரி கழக உறுப்பினர்களான சன்ஞய் குப்தா, தினேஸ் கோயல், சன்தீப் அகர்வால் மற்றும் முகேஸ் அகர்வால் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
நுவரெலியா ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவரும், நுவரெலியா ஸ்ரீ முத்துமாரியம் மன் ஆலய சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆயுட்காலம் காப்பாளருமான வீ. ஆதிமூலம் அவர்களின் வேண்டுக்கோளையேற்று இந்தியா டில்லி ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையுடன் இந்த ஆலயத்தில் 3 கோடி 60 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட தியான மண்டபம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டமாக மேலும் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது எனபதும் குறிப்பிடதக்கது.

