கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய தூதுவருக்குச் சிறீதரன் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார்

