பிபில, ரதலியத்த பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு, தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டுள்ளதாக பிபில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிபில, ரதலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியமையால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் பிபில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

